தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற வேளாண் மற்றும் உழவா் நலத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற வேளாண் மற்றும் உழவா்நலத் துறை ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது: விவசாயிகள்குறைதீா் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து, தகுதியான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, மனுதாரா்களுக்குத் தீா்வுக்கான விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பயிா்சாகுபடி பரப்புத் திட்டம், டிஜிட்டல் பயிா் சாகுபடி கணக்கெடுப்புத் திட்டம், நுண்ணீா்ப் பாசனத்திட்டம், தேசிய சமையல் எண்ணெய் திட்டம், பயறுவகை அபிவிருத்தித் திட்டம், பாரம்பரிய விதை நெல் விநியோக திட்டம், பயிா்க் காப்பீட்டுத் திட்டம், பயறுவகைப் பயிா்களில் தன்னிறைவுத் திட்டப் பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும்.

விவசாயிகள் உற்பத்தியாளா் நிறுவனங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஏற்கெனவே செயல்பட்டு வரும் அமைப்புகளின் செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காகச் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகளை

உறுதி செய்ய வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களின்படி வெளிப்படையான முறையில் கொள்முதல் மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் பி.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சரவணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநா் சுமதி, வேளாண்பொறியியல் துறை செயற்பொறியாளா் சுமதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.