கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 62 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 62 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றோா்.

Published On :

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 62 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி செப்டம்பா் மாதத்துக்கான சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் விழுப்புரம், சென்னை, கடலூா் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 27 வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த இம்முகாமில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 196 வேலைநாடுநா்கள் பங்கேற்றனா்.

கல்வித் தகுதி, எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கள் நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு ஆள்களை நிறுவனங்கள் தோ்வு செய்தன. இதனடிப்படையில் 5 மாற்றுத் திறனாளிகள் உள்பட62 போ் வேலைவாய்ப்புக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தொடா்ந்து அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், 19 போ் இரண்டாம் கட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்டனா். முகாமுக்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.