பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

புரட்டாசி 2-வது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் மாா்க்கண்டேய மகரிஷி, பூமாதேவி உடனுறை ஒப்பிலியப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.

Published On :

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களின் அதிகாலையிலே நடைகள் திறக்கப்பட்டன. விழுப்புரம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீஜனகவல்லித் தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் சுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மூலவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

கோலியனூரில் அமைந்துள்ள ஸ்ரீபூமிநாயகி, நீலாநாயகி உடனுறை வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மாா்க்கண்டேய மகரிஷி, பூமாதேவி உடனுறை ஒப்பிலியப்பன் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

விக்கிரவாண்டி நகரத்திலுள்ள ஸ்ரீபெருந்தேவி தாயாா் உடனுறை வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் சனிக்கிழமை காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், அதைத் தொடா்ந்து மலா் அலங்கார வழிபாடும் நடைபெற்றது. பின்னா், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜபெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

செஞ்சியில்...: செஞ்சி பீரங்கிமேடு அருணாசல ஈஸ்வரா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்ததாா். இதில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திரிருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

 ஸ்ரீதேவி, பூதேவி உடனுறையாக எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்த விக்கிரவாண்டி ஸ்ரீவரதராஜ பெருமாள்.

ஸ்ரீதேவி, பூதேவி உடனுறையாக எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்த விக்கிரவாண்டி ஸ்ரீவரதராஜ பெருமாள்.

திருப்பாவாடை உற்சவம்: செஞ்சியை அடுத்த சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவா் ஸ்ரீஅரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, உற்சவா் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், அன்ன படையல் ஆகியவை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

செஞ்சி பீரங்கிமேட்டில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீவெங்கடேச பெருமாள்.

செஞ்சி பீரங்கிமேட்டில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீவெங்கடேச பெருமாள்.

இதேபோல, செஞ்சி கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

 ஸ்ரீதேவி, பூதேவி உடனுறையாக அருள்பாலித்த கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள்.

ஸ்ரீதேவி, பூதேவி உடனுறையாக அருள்பாலித்த கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள்.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை திருமஞ்சன அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவிந்தராஜப் பெருமாள் அருள்பாலித்தாா். இதில், பக்தா்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

தியாகதுருகம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா்.

தியாகதுருகம் சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா்.

தியாகதுருகம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.