தொகுதி ஓர் அறிமுகம்: விருகம்பாக்கம்

தமிழகத்தில் மிகப்பெரிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான வில்லிவாக்கம் தொகுதியின் சில பகுதி, ஆலந்தூர் தொகுதியின்
Published on
Updated on
1 min read

* தொகுதி பெயர்
 விருகம்பாக்கம்
* தொகுதி வரிசை எண்
 22
* சிறப்புகள்
 தமிழகத்தில் மிகப்பெரிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான வில்லிவாக்கம் தொகுதியின் சில பகுதி, ஆலந்தூர் தொகுதியின் சில பகுதிகளைப் பிரித்து புதிதாக 2009-ம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. மேலும், தென் சென்னை மக்களவை தொகுதிக்குள் விருகம்பாக்கம் தொகுதி இடம்பெற்றுள்ளது.
 அதையடுத்து, கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக இந்தத் தொகுதி தேர்தலை சந்தித்தது. இதில் தேமுதிக வேட்பாளர் பி.பார்த்தசாரதி (அதிமுக கூட்டணி) 71,524 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியுற்ற திமுக வேட்பாளர் தனசேகரன் 57,430 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஸ்ரீதரன் 7,525 வாக்குகளும் பெற்றனர். அதோடு, 5 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
* எல்லைகள்
 வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சியின் 65, 127, 128-வது வார்டுகள், ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளான 129, 130, 131, 137,138 உள்ளிட்ட வார்டுகள் இந்தத் தொகுதியில் உள்ளன. இதில், கோயம்பேடு மார்க்கெட், ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர், சாலிகிராமம், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகள் எல்லைகளாக உள்ளன.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
 கோயம்பேடு, விருகம்பாக்கம், அரும்பாக்கம், சாலிகிராமம், எம்ஜிஆர் நகர், ஜாபர்கான் பேட்டை, கே.கே நகர், நெசப்பாக்கம், சின்மயா நகர், நடேசன் நகர் உள்ளிட்ட பகுதிகள் இந்த தொகுதியில் அமைந்துள்ளன.
* வாக்காளர்கள்
 ஆண்கள் : 1,44,327
 பெண்கள் : 1,41,652
 திருநங்கைகள் : 67
 மொத்தம் : 2,86,046
* புதியதாக இணைந்துள்ள வாக்காளர்கள்
 ஆண்கள் : 41,160
 பெண்கள் : 41,381
 திருநங்கைகள் : 47
 மொத்தம் : 82,541
 
வாக்குச்சாவடிகள் : 279
* இதுவரை எம்எல்ஏ க்கள்....
 இந்த தொகுதியின் முதல் எம்எல்ஏ என்கிற பெருமையை
 பி.பார்த்தசாரதி (தேமுதிக) பெற்றுள்ளார் என்பது
 குறிப்பிடத்தக்கது.
* தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்
 ஆர்.திவாகர்
 மூத்த மண்டல மேலாளர் (டாஸ்மாக்), சென்னை.
 செல்லிடப்பேசி எண்: 94450 29704
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com