முகப்பு
பெங்களூரு

கட்சி கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை: காங்கிரஸாருக்கு தினேஷ் குண்டுராவ் எச்சரிக்கை

கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார்.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:11 am IST
பகிர்:

கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம்
கூறியது:-
கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து, காங்கிரஸார் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மேலிடம் சிபாரிசு செய்தவர்கள் புதிய அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். கட்சியின் மேலிடத்தின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். கட்சியின் கடுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
கட்சி இருந்தால், ஆட்சி இருக்கும். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தனக்கு பதவி கிடைக்கவில்லை என்பதற்காக கட்சிக் கட்டுப்பாட்டை யாரும் மீறக்கூடாது. 
முன்னாள் அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி போன்றவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். மீறினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 
ரமேஷ் ஜார்கிஹோளி கடந்த 7 மாதங்களாக அமைச்சராகப் பதவி வகித்தார்.  அமைச்சரவை கூட்டங்கள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை. எனவேதான் அவரிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அவரது சகோதரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் அவருக்கு எந்த இழுக்கும் ஏற்படவில்லை. அதேபோல முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு எதிராக யாரும் பணியாற்றவில்லை. அவர் மூத்த தலைவர், அனுபவசாலி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அமைச்சரவை விரிவாக்கத்தின்போது மாவட்ட வாரியாக அனுபவசாலிகளுக்கும், இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் ராமலிங்கரெட்டி போன்றவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments