முகப்பு
செய்திகள்

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!

நடிகர் மனோகர் கிருஷ்ணா மகனின் திருமண விழாவில் ஒன்றுகூடிய சுந்தர் தொடர் நடிகர்கள்.

Updated On : 24 ஜூன் 2026, 3:40 pm IST
சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன் - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

நடிகர் மனோகர் கிருஷ்ணா மகனின் திருமண விழாவில் சுந்தரி தொடர் நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி பட்டியலில் அதிக நாள்கள் முதன்மை இடத்தில் இருந்த தொடர்களில் சுந்தரி தொடரும் ஒன்று.

சன் தொலைக்காட்சியில் 2021 பிப்ரவரி முதல் ஒளிபரப்பான சுந்தரி தொடர் 2024 டிசம்பர் தொடக்கத்தில் நிறைவு பெற்றது. இந்தத் தொடரில் நடிகை கேப்ரியல்லா பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

Advertisement

சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன் - படம்: இன்ஸ்டாகிராம்

அவருக்கு ஜோடியாக ஜிஷ்னு மேனனும், முக்கிய பாத்திரத்தில் ஸ்ரீகோபிகாவும் நடித்திருந்தனர். விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகிவந்த சுந்தரி தொடர் 1145 எபிஸோடுகளுடன் நிறைவடைந்தது.

இந்தத் தொடரில் முருகன் பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மனோகர் கிருஷ்ணா. இவர் மகனின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் சுந்தரி தொடரில் நடித்த ஜிஷ்ணு மேனன், மின்னல் தீபா, அரவிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தரி தொடர் நிறைவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், திருமண நிகழ்வில் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்

summary

Actors from Sundar serials attended the wedding of actor Manohar Krishna's son.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments