லட்சுமி தொடரில் அழகு சீரியல் நடிகர்!
லட்சுமி தொடரில் அழகு சீரியல் நடிகர் லோகேஷ் இணைந்துள்ளது குறித்து....
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி தொடரில் அழகு சீரியல் நடிகர் லோகேஷ் பாஸ்கரன் இணைந்துள்ளார்.
நடிகை ஸ்ருதி மற்றும் நடிகர் எஸ்எஸ்ஆர் ஆர்யன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்து வரும் தொடர் லட்சுமி. லட்சுமி என்ற பாத்திரத்தை பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்தத் தொடரில் ரிந்தியா, நேஹா மேனன், நித்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
லட்சுமி தொடர் கடந்த 2024 மார்ச் மாதம் முதல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடர் 600 நாள்களைக் கடந்தும் ஒளிபரப்பாகி வரும் நிலையில், புதிய பாத்திரத்தை தொடர் குழு அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிலையில், சின்ன திரை தொடர்களில் நடித்து கவனம் பெற்ற நடிகர் லோகேஷ் பாஸ்கரன், லட்சுமி தொடரில் இணைந்துள்ளார்.
சின்னத்தம்பி, அழகு, அன்புடன் குஷி, கல்யாணம் முதல் காதல் வரை, மணமகளே வா உள்ளிட்ட தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் லோகேஷ் பாஸ்கரன்.
இவர் முன்னதாக, ரேவதி பிரதான பாத்திரத்தில் நடித்திருந்த அழகு தொடரில் ஸ்ருதி ராஜுடன் இணைந்து நடித்திருந்த நிலையில், லட்சுமி தொடர் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்.
Actor Lokesh Bhaskaran, known for the serial Azhagu, has joined the cast of the Sun TV serial Lakshmi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.