FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

15 ஆண்டுகள்… 38 கொலைகள்! உகாண்டாவை உலுக்கிய சீரியல் கில்லர் கைது!

மனித இறைச்சியை உண்ணும் கொடிய தொடர் கொலையாளி கைது செய்யப்படடது பற்றி..

சீரியல் கில்லர் கைது
பகிர்:

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 15 ஆண்டுகளில் 38 பேரை கொடூரமாகக் கொலை செய்து, அவர்களின் உடலை சமைத்துச் சாப்பிட்ட கொடூர கில்லரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

முஜுரிசி மோசஸ் எனும் அந்த நபர் கடந்த 2010 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மசாகா, இபண்டா மற்றும் காசோ ஆகிய பகுதிகளில் இந்தக் கொலைக் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நபர், ஆசை வார்த்தைகளைக் கூறி வரவழைத்தும், பெண்களை ஏமாற்றியும் கொலை செய்துள்ளார். அவர்களது உடல்களைச் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக உகாண்டாவின் ராணுவத் தளபதி முஹூசி கைனெருகாபா வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

உகாண்டா வரலாற்றிலேயே மிகவும் மோசமான தொடர் கொலையாளி மற்றும் மனித இறைச்சியை உண்ணும் முஜுரிசி மோசஸ் எனும் கொடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அந்த நபரின் இல்லத்திலிருந்து சில ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், அப்பகுதியில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காணாமல் போனோர் வழக்குகள், கொலைச் சம்பவங்கள் குறித்து இந்த நபருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கை, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்ததாகக் கூறப்படும் தொடர் கொலைகள் குறித்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விசாரணை குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் அதிகாரிகள் சேகரித்த ஆதாரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

2010 முதல் 2025 வரை மூன்று பகுதிகளில் சுமார் 38 பேரைக் கொன்று உண்டிருக்கிறான். இவன் மீது பகிரங்க விசாரணை நடத்தப்பட்டு, பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments