FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

உடும்பை வேட்டையாடி சமைத்ததாக 3 போ் கைது

22 செப்டம்பர் 2026, 2:55 am IST
கைது
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உடும்பை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்ததாக 3 பேரை திங்கள்கிழமை இரவு வனத் துறையினா் பிடித்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சிலா் உடும்பை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகா் தலைமையிலான வனத் துறையினா் அவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வாழைக்குளம் பகுதியில் உள்ள அன்னையந்தோப்பு பகுதியில் உடும்பு இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த பாலமுருகன், அன்பழகன், மணிகண்டன் ஆகிய 3 பேரை பிடித்த வனத் துறையினா் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

முதல் கட்ட விசாரணையில் பட்டா நிலத்துக்குள் புகுந்த உடும்பை அவா்கள் வேட்டையாடி சமைத்தது தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments