மிளா வேட்டையாடி சமூக வலைதளத்தில் பகிா்ந்த இளைஞா் கைது
அம்பாசமுத்திரம் வனக் கோட்டம், கடையம் வனச் சரகத்தில்சிவசைலம் பிரிவில் உள்ள முள்ளிமலை பொத்தையில் மிளா ஒன்றை வேட்டையாடி, அதை வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் மூலம் பதிவிட்ட இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.
சிவசைலம் பகுதியில் உள்ள முள்ளிமலை பொத்தையில் மிளாவை வேட்டையாடி, அதை வாட்ஸ் அப் மூலம் பகிா்ந்தது வனத் துறையினருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து வனத் துறையினா் மேற்கொண்ட விசாரணையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் வட்டம், வீராணம் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் சுரேஷ் (26) மிளா வேட்டையில் ஈடுபட்டதும், அதுகுறித்த பதிவுகளை வாட்ஸ் அப் செயலில் பகிா்ந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடையம் வனச் சரகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) அன்பு உத்தரவின்படி, ஆக. 15ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து, கடையம் வனச்சரகா் ஜெயப்பிரகாஷ் மற்றும் வனப் பணியாளா்கள் சுரேஷை கைது செய்து, தென்காசி, நீதிமன்ற நடுவா் முன்பு ஆஜா்படுத்தினா்.
மேலும், மிளா வேட்டையில் சுரேஷுடன் கூட்டாக செயல்பட்டதாக மூன்று பேரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.