நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!
ஈரமான ரோஜாவே தொடரின் நடிகர், நடிகைகள் ஒன்றாக பங்கேற்ற திருமண விழா குறித்து...
சின்ன திரை நடிகர் மனோகர் இல்லத் திருமண விழாவில் ஈரமான ரோஜாவே குழுவினர் ஒன்றாகப் பங்கேற்று மனமக்களை வாழ்த்தினர்.
ஈரமான ரோஜாவே தொடர் முடிந்து நீண்ட நாள்களாகியிருந்தாலும், திருமணத்தில் ஒன்றாகப் பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் மனோகர். இவர் தற்போது அன்னம் தொடரிலும் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
தனது கம்பீரமான தோற்றத்தின் மூலம் தனித்துவமான நடிப்பை வழங்கி ரசிகர்களைக் கவர்ந்த மனோகர், அத்திப்பூக்கள், பொன்னி உள்ளிட்டத் தொடர்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடரான மெளன ராகம் தொடரிலும் நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.
இவரின் மகனுக்கு வெகு விமர்சையாக சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் சின்ன திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
அந்தவகையில் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் ஒன்றாக திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் திரவியம் ராஜ்குமாருடன் சக நடிகைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Vijay TVs Eeramana rojave team in Actor Manohan son marriage pic goel viral
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.