"புதுமை வளர்ச்சித் திட்டங்களை தொழில்நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும்'
புதுமை வளர்ச்சித் திட்டங்களை தொழில்நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என்று லாக்ஹீட் குழுமத்தின் மண்டல இயக்குநர் ஜக்மோகன்சிங் தெரிவித்தார்.
புதுமை வளர்ச்சித் திட்டங்களை தொழில்நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும் என்று லாக்ஹீட் குழுமத்தின் மண்டல இயக்குநர் ஜக்மோகன்சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் புதுமை வளர்ச்சித் திட்டம் தொடர்பாக, பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:-
சர்வதேச அளவில் உள்ள தொழில்நிறுவனங்கள் பல்வேறு சவால்களையும், பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு இந்தியாவின் புதுமை வளர்ச்சித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை தொழில்நிறுவனங்கள் செயல்படுத்தி பலனடைய வேண்டும்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 தொடக்கநிலை தொழில்முனைவோர் தங்கள் தொழில்நுட்பங்களைப் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய அளவில் இளைஞர்களிடம் புதுமையான, நவீனமான தொழில்நுட்ப அறிவுகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.