"காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாட்டை முடக்க வேண்டும்'
காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாட்டை முடக்க வேண்டும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாட்டை முடக்க வேண்டும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், கே.ஆர்.எஸ். அணையை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகத்தின் முக்கிய நதியாக விளங்கும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ், கபின், ஹாரங்கி உள்ளிட்ட அணைகளிலிருந்து தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் செயல்பாட்டால், காவிரியை நம்பியுள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரியை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில் குடிநீர் பிரச்னை தலை தூக்கியுள்ளது. எனவே, காவிரி மேலாண்மை ஆணைய செயல்பாட்டை முடக்க வேண்டும். இதைத் கண்டித்து கர்நாடகத்தில் பரவலாகப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். விரைவில் மாநில அளவிலான முழு அடைப்புப் போராட்டத்திலும் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.