அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!
அமோனியா கசிந்த ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்து...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் உணவு மாதிரிகளை சோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா, ஜாா்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 230 போ் பணிபுரிகின்றனா்.
இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை 100 போ் பணிபுரிந்த நிலையில், அமோனியா வாயு தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு தீப் பிடித்தது.
Advertisement
Advertisement
இந்த வாயுக் கசிவால் அங்கிருந்த 60 பெண் தொழிலாளா்கள் உள்பட 65 பேருக்கும் மேற்பட்டோருக்கு திடீரென காது வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டது. மேலும், உடலில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு, காயங்களாகின.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் சென்னை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 25) உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இதுமட்டுமின்று ஆலையில் நேர்ந்த விபத்து குறித்து, ஆய்வு மேற்கொண்ட 3 பேர் கொண்ட குழுவினர் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Ammonia Leak factory 13 Tonnes of Seafood Seized at Plant
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.