"கூட்டுறவு வங்கிகளின் பயனை தலித் மக்கள் பெற வேண்டும்'
மாநில அளவில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் தலித் மக்கள் பயனடைய வேண்டும் என்று உயர்க் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி. தேவெகெளடா தெரிவித்தார்.
மாநில அளவில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் தலித் மக்கள் பயனடைய வேண்டும் என்று உயர்க் கல்வித் துறை அமைச்சர் ஜி.டி. தேவெகெளடா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், மைசூரில் ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் விவிதோத்ஷா சேவா அமைப்பின் சார்பில் நடைபெற்ற 6-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:
மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிடைக்கும் பயனை வீர சைவர், ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெற்று முன்னேறியுள்ளனர்.
அதேபோன்ற பயனை தலித் மக்களும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். கூட்டுறவு வங்கிகளால் தலித் சமுதாயத்தினர் மட்டுமின்றி மகளிர், மாணவர்கள், விவசாயிகள் பயனடைய வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்களை மாநில அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவு வங்கிகளின் பயனை பெரிதளவில் பெற்ற சீனா போன்ற நாடுகள்கூட அதனை மக்களிடத்தில் பரவலாக்குவதில் தோல்வி அடைந்து விட்டன. ஆனால், இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் மக்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன என்றார் அவர். நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் துருவநாராயணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.