முகப்பு
பெங்களூரு

கந்து வட்டி வசூல் செய்த இருவர் கைது

பொதுமக்களுக்கு கடன் கொடுத்து கந்து வட்டி வசூலித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 5 நவம்பர் 2018, 8:14 am IST
பகிர்:

பொதுமக்களுக்கு கடன் கொடுத்து கந்து வட்டி வசூலித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. ஹுப்பள்ளியைச் சேர்ந்தவர் தாதாபீர் முகமது இஸாக். இவர்கள் இருவரும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்குக் கடன் கொடுத்து அதிக அளவில் வட்டி வசூல் செய்து வந்தனர்.
அதேபோல புதிதாக கட்டுப்படும் கட்டடங்களின் உரிமையாளர்கள், பொறியாளர்களை விதிகளை மீறியுள்ளதாக மிரட்டி பணம் பறித்து வந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், பாலகிருஷ்ணா, தாதாபீர் முகமது இஸாக் ஆகியோரைக் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.28 லட்சம் ரொக்கப் பணம், 2 போலி கைத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments