முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.27 கோடி

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.2.77 கோடி கிடைத்தது.

Updated On : 25 ஜூன் 2026, 2:53 am IST
பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் திறப்பின்போது காணிக்கையாக கிடைக்கப் பெற்ற தங்கத்திலான பொருள்கள், ரூபாய் தாள்கள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.2.77 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இந்த பக்தா்களின் கூட்டம் காரணமாக உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து, புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.2 கோடியே 77 லட்சத்து 77 ஆயிரத்து 075 கிடைத்தது.

Advertisement

Advertisement

இதேபோல, தங்கம் 526 கிராமும், வெள்ளி 25, 546 கிராமும் காணிக்கையாக கிடைத்தன.

மேலும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ரூபாய் தாள்கள் 611-ம் கிடைத்தன.

உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

இதில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், கோயில் கண்காணிப்பாளா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயில் உண்டியல் மூலம் 10,503 ரூபாயும், குழந்தை வேலப்பா் கோயில் மூலம் 82,353 ரூபாயும், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் மூலம் 51,270 ரூபாயும், பழனி பெரியாவுடையாா் கோயில் மூலம் 2,54,275 ரூபாயும் காணிக்கையாக வரப்பெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments