முகப்பு
பெங்களூரு

மலர்க் கண்காட்சி: நாளை முதல் மெட்ரோ ரயில் சிறப்பு சேவை

பெங்களூரில் நடைபெற்றுவரும் மலர்க் கண்காட்சியை முன்னிட்டு காகிதப் பயணச்சீட்டு சேவையை வழங்க பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் திட்டமிட்டுள்ளது.

Updated On : 24 ஜனவரி 2019, 2:21 am IST
பகிர்:

பெங்களூரில் நடைபெற்றுவரும் மலர்க் கண்காட்சியை முன்னிட்டு காகிதப் பயணச்சீட்டு சேவையை வழங்க பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பெங்களூரு லால்பாக் பூங்காவில் குடியரசு தின மலர்க் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இதை முன்னிட்டு ஜன.25 முதல் 27-ஆம் வரையில் 3நாள்களுக்கு காகிதப் பயணச்சீட்டு சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8மணி வரை லால்பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வேறு எந்த ரயில் நிலையத்துக்கும் மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.30 ஆக இருக்கும். 
இந்த பயணத்துக்கு காகிதப்பயணச்சீட்டு அளிக்கப்படும். இந்த காகிதப்பயணச்சீட்டு ஒருநாளைக்கு மட்டுமே செல்லத்தக்கதாக இருக்கும். காகிதப்பயணச்சீட்டுகளை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கொள்முதல்செய்து கொள்ளலாம். லால் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் 8 மணி வரை பயணச்சீட்டு விநியோகிக்கப்படும். 
வேறு எந்த ரயில் நிலையங்களில் இருந்து லால்பாக் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் வழக்கமான கட்டணத்தில் வில்லைகள் அல்லது அட்டைகள் வாயிலாக பயணிக்கலாம். லால்பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழையும் போதும், இறங்கும் ரயில் நிலையத்திலும் காகிதப்பயணச் சீட்டுகளை காட்ட நேரிடும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.