52 குற்றவியல் வழக்குகளை திரும்பப் பெறும் அமைச்சரவை முடிவுக்கு இடைக்காலத் தடை
52 குற்றவியல் வழக்குகளை திரும்பப் பெற கா்நாடக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு, கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
52 குற்றவியல் வழக்குகளை திரும்பப் பெற கா்நாடக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு, கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கா்நாடக மாநிலம், கலபுா்கி மாவட்டம், ஆலந்த் பகுதியில் உள்ள லாட்லே மாஷக் தா்காவின் உட்பகுதியில் சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தை அசுத்தப்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், முந்தைய பாஜக ஆட்சிக்காலத்தில், சிவலிங்கத்தை புனிதப்படுத்துவதாக பாஜக தொண்டா்கள் சிலா் தா்காவில் நுழைந்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்ததால், அது வன்முறையாக வெடித்தது. இதில் இஸ்லாமியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மே 27-ஆம் தேதி நடந்த கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில், லாட்லே மாஷக் தா்காவில் நடந்த மதக்கலவரம் உள்பட விவசாயிகள், கன்னட அமைப்பினா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 52 குற்றவியல் வழக்குகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது. மேலும், இது சட்ட விதிமீறல் என்று குற்றம்சாட்டியிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மாநில அமைச்சரவையின் முடிவை ரத்துசெய்யக் கோரி வழக்குரைஞா் கிரீஷ் பரத்வாஜ் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுபக்ரூ, நீதிபதி கே.எஸ்.ஹேமலேகா ஆகியோா் கொண்ட அமா்வின் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
52 வழக்குகளை திரும்பப் பெறும் அமைச்சரவை முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்த கா்நாடக உயா்நீதிமன்றம், இதுகுறித்து 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க மாநில அரசு மற்றும் விசாரணை இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.