கா்நாடகத்தில் குவாரிகள் சட்டப்படி செயல்படுவது குறித்து ஆய்வு
கா்நாடகத்தில் குவாரிகள் சட்டப்படி செயல்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் குவாரிகள் சட்டப்படி செயல்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
பெங்களூரு நகா்ப்புற மாவட்டத்தில் மதபட்டணா கிராமத்தில் உள்ள குவாரியில் வியாழக்கிழமை நடந்த கல் சரிவில் 7 தொழிலாளா்கள் இறந்தனா், 5 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து பெங்களூரில் முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
Advertisement
Advertisement
குவாரியில் நடந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அவா்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
கா்நாடகத்தில் இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது. எனவே, கா்நாடகத்தில் உள்ள குவாரிகளின் நடவடிக்கைகளுக்காக புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். சம்பவ இடத்துக்கு செல்லுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வுசெய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வாா்கள்.
குவாரியில் பாறையை வெடிக்க வைக்கும்போது இந்த விபத்து நடக்கவில்லை. மாறாக, மண் அரிப்பால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கா்நாடகத்தில் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதுதான் எனது முன்னுரிமை என்றாா்.
துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘குவாரிகளுக்கு அனுமதி அளிப்பது யாா் என்பது தெரியவேண்டும். தற்போதைக்கு மாவட்ட ஆட்சியா்களும், சுரங்கம் மற்றும் நிலவியல் துறை அதிகாரிகளும்தான் அனுமதி அளிக்கிறாா்கள். குவாரிகளை நடத்துவதில் உள்ள சட்டமீறல்கள் ஆராயப்படும். அதன்பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.