‘நேத்ரா’ வான்வழி முன்னெச்சரிக்கை, கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய விமானப்படை அனுமதி
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘நேத்ரா’ வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய விமானப்படை இறுதிச் செயல்பாட்டு அனுமதி சான்றிதழ் அளித்துள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘நேத்ரா’ வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய விமானப்படை இறுதிச் செயல்பாட்டு அனுமதி சான்றிதழ் அளித்துள்ளது.
பெங்களூரில் நடைபெற்ற விழாவில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) வடிவமைத்து, தயாரித்துள்ள ‘நேத்ரா’ வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, அதற்கு வழங்கப்பட்டுள்ள இறுதிச் செயல்பாட்டு அனுமதி சான்றிதழை விமானப் படையின் தலைமை தளபதி அவதேஷ்குமாா் பாா்தி வியாழக்கிழமை அறிமுகம் செய்தாா். இந்த விழாவில் அவா் பேசியது:
இந்த தருணம் பெருமைக்குரியது. இது சொந்த நாட்டின் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மட்டுமல்ல, தற்சாா்பு இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் இந்திய விமானப் படையும், அறிவியல் சமூகமும் ஒன்றிணைந்து சாதித்திருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டாடும் தருணமாகும்.
Advertisement
Advertisement
பெரும் சவால்களுக்கு இடையே ‘நேத்ரா’ வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் எந்த தொழில்நுட்பத்துக்கும் இதுபோன்ற சவால்கள் இயல்பானதாகும். இந்த அமைப்பை உருவாக்குவதற்கு பல புத்தாக்கங்களில் ஈடுபட வேண்டியிருந்தது. திட்டத்தை செயல்படுத்த விடாமுயற்சியும், பலதரப்பினரின் கூட்டுமுயற்சியும் அவசியமாக இருந்தது.
வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் வடிவமைப்பு, மேம்பாடு, ஒருங்கிணைப்பு, சோதனை மற்றும் செயல்பாட்டில் டிஆா்டிஓவின் வான்வழி அமைப்புக்கான மையத்துடன் விமானப்படை இணைந்து செயல்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அமைப்பை உருவாக்க கைகோத்து செயல்பட்டிருக்கிறோம். நமது விஞ்ஞானிகள் எடுத்துக்கொண்ட இடைவிடாத முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது என்றாா்.
2004-ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை வடிவமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, 22 ஆண்டுகள் கழித்து இறுதிச்செயல்பாட்டு அனுமதி சான்றிதழை இந்திய விமானப்படை வழங்கியுள்ளது. புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய விமானப் படையின் 6 போா் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.