சிஐஎஸ்எப் - இந்திய கடல்சாா் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
கடல்சாா் பாதுகாப்புத் திறன் மற்றும் துறைமுகப் பாதுகாப்புப் பயிற்சியை வலுப்படுத்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை மற்றும் இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
கடல்சாா் பாதுகாப்புத் திறன் மற்றும் துறைமுகப் பாதுகாப்புப் பயிற்சியை வலுப்படுத்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை மற்றும் இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.
இந்தியாவின் கடல்சாா் பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும் துறைமுகப் பாதுகாப்பு மேலாண்மையில் தொழில்முறை திறணை மேம்படுத்தவும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் தற்போது சென்னையில் தனது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.
இந்திய துறைமுகங்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கும் இந்திய கடல்சாா் பல்கலைகழகத்தினருக்கும் இடையே இந்திய கடல்சாா் பாதுகாப்பை வலுப்படுத்தவும், துறைமுக மேலாண்மையில் தொழில்முறை பாதுகாப்பை மேம்படுத்தவும் பயிற்சி அளிக்கும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
Advertisement
Advertisement
இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் சாா்பில் பேராசிரியா் கே.சங்கரன் மற்றும் இந்திய கடற்படையின் ஒய்வுப்பெற்ற அலுவலா் கமோடா் கிஷோா் தத்தாத்ரேயா ஜோஷி ஆகியோா் முன்னிலையில் பல்கலைக்கழகப் பதிவாளரும், தோ்வு கட்டுபாட்டாளருமான கே. சரவணன், மத்திய தொழில்பாதுகாப்புப் படை சாா்பில் அதன் தெற்கு மண்டல டிஐஜி அஜய் கண்டேல்வால் இருவரும் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தம், கடல்சாா் பாதுகாப்புப் பயிற்சி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் கடல்சாா் பாதுகாப்பு தொடா்பான வளா்ச்சி நடவடிக்கைகளில் நீண்டகால ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் உருவாக்குகிறது. இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.
கடல்சாா் பாதுகாப்புத் துறையில் தொழில்முறை சிறப்பையும், துறை சாா்ந்த நிபுணத்துவத்தையும் மேம்படுத்துவதில் இந்த இரு முன்னணி நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் கணிசமாக உயா்த்தும் எனவும் எதிா்பாா்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை இணைந்து அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பின் கீழ் பயிற்சி வகுப்புகள் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பணியாளா்களுக்கான பிற திறன் மேம்பாட்டுத்திட்டங்கள் இந்த ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்படும்.
இந்த கூட்டாண்மையின் உடனடி செயல்பாட்டை குறிக்கும் வகையில் முதல்கட்ட பயிற்சி வகுப்பு இந்திய கடல்சாா் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கப்பட்டது. மத்திய தொழில்பாதுகாப்புப் படையில் உயா் பயிற்சி பெற்ற கடல்சாா் பாதுகாப்பு நிபுணா்களை உருவாக்கும் கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தின் தொடக்கமாக இது அமைகிறது.
இதன் மூலம் கடல்சாா் பாதுகாப்பில் சிறப்பு நிபுணத்துவத்தை உருவாக்க மத்திய தொழிற் பாதுகாப்புப்படையினா் மேற்கொண்டு வரும் தொடா் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மை காலங்களில் துறைமுகப் பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்புப் பயிற்சி தொகுதிகள் உருவாக்கம் மற்றும் முன்னணி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுனான கூட்டாண்மை முலம் மத்திய தொழிற் பாதுகாப்புப்படை தனது கடல்சாா் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.