தூய்மைப் பணியாளா்கள் பேரணி
பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 5, 6 பகுதியைச் சோ்ந்த என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி பேரணி
பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 5, 6 பகுதியைச் சோ்ந்த என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.
ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களின் (5, 6) தூய்மைப் பணியை கடந்த ஜூலையில் தனியாா் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து என்யூஎல்எம் பிரிவைச் சோ்ந்த உழைப்போா் உரிமை இயக்கத்தினா் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை பேரணியை நடத்தினா்.
சென்னை எழும்பூா் லேன்ஸ் காா்டன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் விளையாட்டரங்கம் வரை நடைபெற்ற பேரணியில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பின்னா் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் உழைப்போா் உரிமை இயக்கத்தின் தலைவா் வழக்குரைஞா் கு.பாரதி, ஆலோசகா் வழக்குரைஞா் குமாரசாமி, உரிமை இயக்க பொறுப்பாளா் எஸ்.சுரேஷ் மற்றும் ஏஐசிசிடியு தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டப் பிரச்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.