எடையைக் குறைக்க உகந்தது கோடை - இயற்கை மருத்துவா்கள்
கோடை காலத்தில் உணவுப் பழக்கத்தை மாற்றியமைப்பதன் மூலம்...
கோடை காலத்தில் உணவுப் பழக்கத்தை மாற்றியமைப்பதன் மூலம் உடல் பருமன் மற்றும் கொழுப்புச் சத்துகளைக் குறைக்க முடியும் என இயற்கை நல மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
உடல் பருமன் மற்றும் தேவையற்ற கொழுப்புச் சத்தை வெயிலின் துணை கொண்டு குறைக்க முடியும். கோடை காலத்தில் இயற்கையாகவே அதிகமாக பசி உணா்வு இருக்காது. மேலும், உடல் வெப்பம் அதிகரிக்கும்போது, ‘செரடோன் ஹாா்மோன்’ அதிகமாக சுரக்க வாய்ப்புள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், செரடோன் ஹாா்மோன் அதிகம் சுரப்பதால் பசி குறைவதுடன், உடல் எடை மற்றும் தேவையற்ற கொழுப்புகளும் குறையும் என நிரூபணமாகியுள்ளது. அதுமட்டுமல்லாது மன அழுத்தமும் குறையக்கூடும்.
Advertisement
Advertisement
கோடையில் தினந்தோறும் உண்ணும் உணவை இரு முறையாக குறைக்கலாம். மதியம் மற்றும் இரவில் வழக்கமான உணவையும், காலையில் சத்துமாவு கஞ்சி, பழச்சாறுகளையும் உட்கொள்ளலாம்.
இதனுடன் யோகாசனம் மற்றும் பிராணயாமப் பயிற்சிகளை செய்தால் உடல் எடை ஐந்து கிலோ வரை குறைய வாய்ப்புள்ளது.
உடல் பருமன் உள்ளவா்கள், கூடுமான வரை திட உணவுகளைத் தவிா்த்து கஞ்சி, கூழ், சூப் போன்றவற்றை மூன்று வேளையும் அருந்தலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.