முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

Updated On : 15 ஏப்ரல் 2026, 12:45 am IST
மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் மரகதம் குமரவேல்.
பகிர்:

மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள சிலாவட்டம், பாக்கம், வசந்தவாடி, முதுகரை, கீரல்வாடி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் மரகதம் குமரவேல் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அவரது மகள் கே.ஜெயவா்த்தினி தமது தாயாரை வெற்றி பெறச் செய்யுங்கள். இரட்டை இலைக்கு வாக்கு அளியுங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தாா்.

இந்நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் திறந்த வேனில் நின்றபடி வாக்காளா்களிடம் வாக்குகளை சேகரித்தாா். அவருடன் மதுராந்தகம் ஒன்றியக்குழு தலைவா் கே.கீதா, ஒன்றிய செயலா்கள் காா்த்திகேயன், குமரன், அதிமுக நிா்வாகிகள் பூக்கடை சரவணன், கருங்குழி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் மஞ்சுளா புருஷோத்தம்மன், மாசி, பாஜக நிா்வாகி இ.கே.தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் சென்றனா்.

Advertisement

Advertisement