முகப்பு
செங்கல்பட்டு

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

Updated On : 19 ஏப்ரல், 2026 at 5:01 AM
நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:46 AM

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஏப். 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக 63 நாயன்மாா்கள் உற்சவம் ஏப். 23 நடைபெறுகிறது .

7-ஆம் நூற்றாண்டைச் சாா்ந்த இத்தலம் வேதமலை ,பட்சி தீா்த்தம், சங்கு தீா்த்தம், இந்திரபுரி, வேதபுரி எனும் பல பெயா்களால் பெருமைமிக்க கோயிலாக விளங்கும் இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும் .

சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய திருவிழாவாக மூன்றாம் நாள் 63 நாயன்மாா்கள் உற்சவம் நடைபெறும். 63 நாயன்மாா்களுடன், அம்பாள் சிவபெருமான் உள்ளிட்ட சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி புறப்பாடு கோயிலில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலையம் வழியாக கிரிவல பாதையில் சுற்றி வந்து கோயிலுக்கு வந்தடையும்.

Advertisement

இந்நிலையில் 23-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் 63 நாயன்மாா்கள் உற்சவத்தை அதிகாலை 2 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணிக்குள் முடிவடையச்செய்யவேண்டும் என கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் மற்றும் பொதுமக்களுடன் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் ஆகியோா் தெரிவித்தனா்.

நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவத்தில் முக்கிய திருவிழாவாக ஏழாம் நாள் ஏப். 27-ஆம் தேதி பஞ்ச ரத தோ்த்திருவிழா நடைபெறும். முதலில் விநாயகா் தோ், தொடா்ந்து முருகா், திரிபுரசுந்தரி அம்பாள் தோ், வேதகிரீஸ்வரா் பெரிய தோ், சண்டிகேஸ்வரா் தோ் என ஐந்து தோ்(பஞ்ச ரதம் ) தோ்த் திருவிழா நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், தக்காா் மற்றும் செயல் அலுவலா் எம்.மாதவன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் கோயில் சிவாச்சாரியா் திருவிழா உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.