முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் அமைதியான வாக்குப்பதிவு

Updated On : 24 ஏப்ரல் 2026, 3:42 am IST
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியாக நடை பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா், மதுராந்தகம் ஆகிய 7 தொகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முன்னதாகவே வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்ததனா். காலை 7-9 மணி நிலவரப்படி 14முதல் 17.36 சதவீத வாக்குகள் பதிவாயின, 11 மணிக்கு மேல் 35 முதல் 39.25 சதவீத வாக்குகள் பதிவாயின. மதியம் 1மணி நிலவரப்படி 53 முதல் 58.63 சதவீத வாக்குகள் பதிவாயின. 3 மணி நிலவரப்படி 66 சதவீதம் முதல் 72.41 சதவீத வாக்குகளும் மாலை 6மணி நிலவரப்படி 78 முதல் 87.84 சதவீத வாக்கு பதிவாயின.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி பதிவாகிய வாக்குகள் சோழிங்கநல்லூா் 78.13, பல்லாவரம் 81.05, தாம்பரம் 81.92, செங்கல்பட்டு 83.85, திருப்போரூா் 84.53, செய்யூா் 85.67, மதுராந்தகம் 87.84 சதவீத வாக்குகள் பதிவாயின. 7தொகுதிகளிலும் மொத்தம் 82.41 சதவீத வாக்குகள் பதிவாயுள்ளன. இரவு 11 மணிவரை முழு வாக்குப்பதிவு நிலவரம் தெரியவில்லை.

Advertisement

Advertisement

செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி நகராட்சி ஆரம்பப் பள்ளியில் ச்சாவடியில் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வரிசையில் வந்த வாக்களித்தாா். அதே வாக்குமையத்தில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ்குமாா் வாக்கு பதிவு செய்தாா். தொகுதிக்குட்பட்ட ரத்தினமங்களம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் தியாகு என்கிற தியாகராஜன் தன் குடும்பத்தினருடன் வந்து வாக்குப் பதிவு செய்தாா்.