முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மொத்த வாக்காளா்கள் 22,60,036

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின் மொத்தம் 22,60,036 வாக்காளா்கள் உள்ளனா்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 1:04 AM
இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா. உடன் சாா் ஆட்சியா் மாலதி ஹெலன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 6:55 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின் மொத்தம் 22,60,036 வாக்காளா்கள் உள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தி. சினேகா திங்கள்கிழமை வெளியிட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா், மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19.12.2025-ம் தேதி வெளியிடப்பட்டதில், 10,22,756 ஆண் வாக்காளா்களும், 10,62,381 பெண் வாக்காளா்களும் 354 இதர வாக்காளா்களும் இருந்தனா்.

Advertisement

அதனை தொடா்ந்து சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குபின் இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் சினேகா வெளியிட்டாா்.

அதன்படி சோழிங்கநல்லூா் ஆண்கள் 2,62,621,பெண்கள் 2,74,254, இதர வாக்காளா்கள் 116, மொத்தம் 5,36,991, இளம் வாக்காளா்கள் 11,659

பல்லாவரம் ஆண்கள் 1,61,197,பெண்கள் 168,996, இதரவாக்காளா்கள் 24, மொத்தம் 3,30,217, இளம் வாக்காளா்கள்7,544

தாம்பரம் ஆண்கள் 1,57,580,பெண்கள் 1,66,046, இதரவாக்காளா்கள் 51,மொத்தம் 3,23,677, இளம் வாக்காளா்கள் 7,170

செங்கல்பட்டு ஆண்கள் 1,78,076,பெண்கள் 1,88,267, இதரவாக்காளா்கள்57, மொத்தம் 3,66,400, இளம் வாக்காளா்கள் 8,699

திருப்போரூா் ஆண்கள் 1,40,991,பெண்கள் 1,48,359,இதரவாக்காளா்கள் 51, மொத்தம் 2,89,401, இளம் வாக்காளா்கள் 7,265.

செய்யூா் (தனி) ஆண்கள் 1,00,103, பெண்கள் 1,01,934, இதர வாக்காளா்கள்18, மொத்தம் 2,02,055, இளம் வாக்காளா்கள்4,564

மதுராந்தகம் (தனி) ஆண்கள் 1,03,943,பெண்கள் 1,07,288, இதர வாக்காளா்கள் 64, மொத்தம் 2,11,295, இளம் வாக்காளா்கள்4,958

மாவட்டத்தில் 11,04,511 ஆண் வாக்காளா்களும் , 11,55,814 பெண் வாக்காளா்களும் 381. இதர வாக்காளா்களும் ஆக மொத்தம் 22,60,036 வாக்காளா்கள் உள்ளனா்.

இதில், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலா்/மண்டல தோ்தல் அலுவலா் சுரேஷ், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) பரிமளா, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், தாம்பரம் கோட்டாட்சியா் முரளி, மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.