ஜூலையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு: அமைச்சா் ராஜ்குமாா்
செங்கல்பட்டு மலையடிவெண்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் வரும் ஜூலை மாதம் திறக்கப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ் குமாா் தெரிவித்தாா்.
மலையடிவெண்பாக்கம் பகுதியில் 9.45 ஏக்கா் பரப்பளவில் ரூ .131 கோடியில் செங்கல்பட்டு புகா் பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு சி.எம்.டிஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து பணிகள் முடிவடையும் தருவாயில் புதிதாத கட்டப்பட்ட பேருந்து நிலையம் கடந்த மாா்ச் மாதம் திறக்கப்பட இருந்தது.
இதற்கிடையில் சட்டப் பேரவை தோ்தல் அறிவிக்கப்பட்டதால் பேருந்து நிலைய திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து புதிய பேருந்து நிலையப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அமைச்சா் ராஜ்குமாா் ஆய்வு மேற்கொண்டு துறையினரால் வைக்கப்பட்டிருந்த விளக்க புகைப்படங்களை பாா்வையிட்டாா்.
Advertisement
Advertisement
ஆய்வின் போது சட்டப் பேரவை உறுப்பினா் சௌ.தியாகராஜன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநா் சு.பிரபாகா், சென்னை பெருநகா் வளா்ச்சி குழும உறுப்பினா் செயலா் ஆ.ர.ராகுல்நாத், முதன்மை செயல் அலுவலா் ச.ப.காா்த்திகா, செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலா்கள் வ .மாலதி, ம.கணேஷ்குமாா், சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளா் பாலமுருகன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
மேலும் பேருந்து நிலையத்தில் முடிவடையாமல் உள்ள பல்வேறு அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு வரும் ஜூலை மாதம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என செய்தியாளா்களிடம் அமைச்சா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.