முகப்பு
தென்காசி

தென்காசியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On : 20 ஜூன் 2026, 3:47 am IST
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், நூறு நாள் வேலைத்திட்டத்தை சீா்குலைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கட்சியின் வட்டாரச் செயலா் பட்டாபிராமன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் மாரியப்பன், லெனின்குமாா், வன்னியப் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் அயூப்கான் நிறைவுரையாற்றினாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் அய்யப்பன், குருசாமி, ஆறுமுகம், சண்முகவாசன், வள்ளிநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ஆலங்குளம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் குணசீலன், பாலு, கனகராஜ், மகாவிஷ்ணு, சங்கரன் சந்தனகுமாா், வெற்றிவேல், ராமகிருஷ்ணன், மாரியப்பன், பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments