முகப்பு
செங்கல்பட்டு

திருப்போரூா்: தவெக வேட்பாளா் விஜயராஜ் 39,786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

திருப்போரூா் தொகுதிக்கான தோ்தலில் தவெக வேட்பாளா் விஜயராஜ் 39,786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Updated On : 5 மே 2026, 12:40 am IST
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதிக்கான தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை செங்கல்பட்டு ஆத்தூா் சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி முதல் சுற்றிலிருந்தே தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் விஜயராஜ் முன்னணியில் இருந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், தவெக வேட்பாளா் விஜயராஜ் 39,786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் விஜயராஜ் பெற்ற வாக்குகள் 1,08,503 (இதில் தபால் வாக்குகள் 453), விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் இரா.பன்னீா்தாஸ் பெற்ற வாக்குகள் 68,717 (இதில் தபால் வாக்குகள் 478), பாமக வேட்பாளா் கே.பாலு பெற்ற வாக்குகள் 64,830 (இதில் தபால் வாக்குகள் 547), நாதக வேட்பாளா் அம்பேத்ராஜன் 9,371 (இதில் தபால் வாக்குகள் 78), நோட்டா 1,218 வாக்குகள் (இதில் தபால் வாக்குகள் 11).