முகப்பு
சென்னை

முதியோர்களுக்கான நடமாடும் பல் மருத்துவமனை

முதியோர்களுக்கான நடமாடும் பல் மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 6 ஏப்ரல் 2018, 4:20 am IST
பகிர்:

முதியோர்களுக்கான நடமாடும் பல் மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நடக்க இயலாத நிலையில் உள்ள முதியோருக்கு அவர்களது வீட்டுக்கே சென்று பல் மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் இம்மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. 
முதியோர் மருத்துவ நிபுணர் வி.எஸ்.நடராஜன் இம்மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார்.
இந்த நடமாடும் மருத்துவமனையில் பல் சிகிச்சைக்குத் தேவையான இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. 
பல் சொத்தை அடைத்தல், பல் கட்டுதல், ஆடும் பற்களுக்கு சிகிச்சை, லேசர் மூலம் ஈறுகளில் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும். 
இம்மருத்துவமனையை பல் கட்டும் சிகிச்சை நிபுணர் முரளி கார்த்திக் நிர்வகிக்கிறார். முதியோர் தங்கள் இல்லத்திலேயே பல் சிகிச்சை பெற 044 - 2462 1988, 88256 85125 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments