ரயில் படிக்கட்டில் பயணம்: இரு இளைஞர்கள் சாவு
மின்சார ரயிலில் படியில் தொங்கியப்படி சென்ற இரு இளைஞர்கள் பரங்கிமலை ரயில் நிலைய சிமெண்ட் தடுப்பில் மோதி
மின்சார ரயிலில் படியில் தொங்கியப்படி சென்ற இரு இளைஞர்கள் பரங்கிமலை ரயில் நிலைய சிமெண்ட் தடுப்பில் மோதி உயிரிழந்தனர். அவர்களை அடையாளம் காண ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியது: சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு மாலை 6.40 மணியளவில் புறப்பட்ட மின்சார ரயிலில் அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டது. சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர். அந்த ரயில் பரங்கிமலை ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இருப்புப் பாதையையொட்டி கிடந்த சிமெண்டால் ஆன தடுப்பு ஒன்றில் படிக்கட்டில் தொங்கிச் சென்ற இளைஞர்கள் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இவர்கள் 18, 20 வயதுடையவர்களாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் பற்றிய அடையாளம் தெரியவில்லை. மாம்பலம் ரயில்வே போலீஸார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.