முகப்பு
சென்னை

அக்.11-இல் சென்னையில் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு குறித்த ஒருநாள் பயிற்சி வியாழக்கிழமை (அக்.11) அண்ணா

Updated On : 9 அக்டோபர் 2018, 4:21 am IST
பகிர்:


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு குறித்த ஒருநாள் பயிற்சி வியாழக்கிழமை (அக்.11) அண்ணா நகரில் நடைபெறுகிறது.
சுயவேலை வாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வரும் வியாழக்கிழமை (அக்.11) நடைபெறவுள்ளது.
காளான் வளர்ப்புப் பயிற்சி: காளான் வளர்ப்புத் தொடர்பான பயிற்சி வெள்ளிக்கிழமை (அக்.12) நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் அனைவரும் பங்கேற்கலாம்.
ஒரு நாள் பயிற்சிக் கட்டணம் ரூ.600. காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண்.யு-30, 10 -ஆவது தெரு, (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்), அண்ணா நகர் முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையத் தலைவர் எச்.கோபால் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.