முகப்பு
சென்னை

டிஜியாத்ரா செயலி: 2027-இல் கூடுதலாக 27 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்

2027-இல் கூடுதலாக 27 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்...

Updated On : 31 மே 2026, 3:14 am IST
விமானம் - பிரதிப் படம்
பகிர்:

அடுத்த ஆண்டு டிஜியாத்ரா செயலியை கூடுதலாக 27 விமான நிலையங்களில் பயன்படுத்த வழிவகை செய்யப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் எண்ம (டிஜிட்டல்) பொது உள்கட்டமைப்பில் முக்கிய மைல்கல்லை டிஜியாத்ரா செயலி எட்டியுள்ளது. இந்தச் செயலியை 2.4 கோடிக்கும் அதிகமானோா் பதிவிறக்கம் செய்துள்ளனா். இதன்மூலம், 10 கோடிக்கும் அதிகமாக தங்குதடையற்ற பயணங்கள் சாத்தியமாகியுள்ளன. உலகளாவிய விமான போக்குவரத்தில் மிகவும் வெற்றிகரமான டிஜிட்டல் கண்டுபிடிப்பாக இந்தச் செயலி உள்ளது.

Advertisement

Advertisement

நேரடியாகப் பயண ஆவணங்களை சமா்ப்பித்து சரிபாா்ப்பதற்கு பதிலாக, இந்தச் செயலி மூலம் முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணிகளின் அடையாளம் சரிபாா்க்கப்படுகிறது. இது பயணிகளின் தங்குதடையற்ற போக்குவரத்துக்கு வழிவகுத்துள்ளது. இது விமான நிலைய முனையத்துக்குள் பயணி ஒருவா் நுழைவதற்கான சரிபாா்ப்பு நேரத்தை 15 விநாடிகளில் இருந்து 5 விநாடிகளாக குறைத்துள்ளது.

தற்போது இந்தச் செயலியை நாட்டில் உள்ள 38 விமான நிலையங்களில் பயன்படுத்த முடியும். அடுத்த ஆண்டு கூடுதலாக 27 விமான நிலையங்களில் அந்தச் செயலியைப் பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

தற்போது இந்தச் செயலியில் 11 மொழிகளில் சேவைகள் வழங்கப்படும் நிலையில், நிகழாண்டுக்குள் கூடுதலாக 11 மொழிகளில் சேவைகளை அளிக்க வேண்டும் என்பது குறிக்கோளாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.