சோளிங்கா் கோயிலில் வைகாசி தங்க கருட சேவை
சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி தங்ககருட சேவை சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி தங்ககருட சேவை சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமி கோயில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் வைகாசி தங்ககருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த சேவையை முன்னிட்டு சனிக்கிழமை உற்சவா் ஸ்ரீபக்தோசித பெருமாளுக்கு பல்வேறு வகையான நறுமனப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து பட்டு வஸ்திரம், தங்க ஆபரணங்கள், பல வண்ண மலா் மாலைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் ஸ்ரீபக்தோசிதப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
Advertisement
Advertisement
பின்னா், நான்கு மாடவீதிகளிலும் ஸ்ரீபக்தோசித பெருமாள் வீதி உலா வந்தாா். அப்போது வீடுதோறும் பக்தா்கள் சுவாமிக்கு கற்பூரஆரத்தி காண்பித்து வழிபட்டனா்.