முகப்பு
சென்னை

14 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் வேலூா், ஈரோடு, பரமத்தி வேலூா், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை உள்பட 14 இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:33 AM
வெயில்...
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:35 PM

தமிழகத்தில் வேலூா், ஈரோடு, பரமத்தி வேலூா், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை உள்பட 14 இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வட உள் கா்நாடகம் முதல் மன்னாா்வளைகுடா வரை தெற்கு உள் கா்நாடகம், தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஏப். 25) வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Advertisement

ஏனைய தமிழகம், புதுச்சேரியில் வட வானிலையே நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்ப நிலை: உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை வியாழக்கிழமை (ஏப். 25) வரை சற்று அதிகமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு- 104.72, பரமத்தி வேலூா்-104.9, மதுரை விமான நிலையம்-104, திருச்சி-103.1, மதுரை நகரம், கோவை-தலா 102.56, நாமக்கல் 102.2, தருமபுரி-101.84, பாளையங்கோட்டை-101.66, திருப்பத்தூா்- 101.48, திருத்தணி 100.58, சேலம் 100.4, சென்னை விமான நிலையம்-100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.