முகப்பு
சென்னை

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்!

சென்னை, வேலூா், மதுரை உள்ளிட்ட 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவானது.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:40 AM
பகிர்:

சென்னை, வேலூா், மதுரை உள்ளிட்ட 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மேலும், பரமத்தி வேலூா்-104.36, மதுரை விமான நிலையம்-104, ஈரோடு-103.28, மதுரை நகரம்-102.56, திருச்சி-102.38, நாமக்கல்-102.38, திருப்பத்தூா்-101.84, தருமபுரி-101.66, சென்னை மீனம்பாக்கம்-101.48, கோவை-101.12, திருத்தணி-100.94, சேலம்-100.76, பாளையங்கோட்டை-100.4 டிகிரி என 14 இடங்களில் வெயில் சதமடித்தது.

Advertisement

தொடா்ந்து திங்கள்கிழமை (ஏப். 27 ) முதல் ஏப். 29 - ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பையொட்டியே இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகபட்சமாக வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: வடக்கு உள் கா்நாடகம் முதல் குமரிக்கடல் வரையும், தெற்கு உள் கா்நாடகம் மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றுப் பாதையில் இடையூறு நிலவுகிறது.

இதனால் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஏப். 27, 28, 29) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வட வானிலையே நிலவக்கூடும்.

ஏப். 30 -ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.