புழல் சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு
புழல் மத்திய சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தாா்.
புழல் மத்திய சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தாா்.
சென்னை எண்ணூா் அருகே உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ரா.செந்தில் (45). இவா், காசிமேடு காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தாா்.
இந்நிலையில் செந்தில், கடந்த ஜன. 26-ஆம் தேதி புழல் சிறையில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்தாா். இதில் தலையில் பலத்தக் காயமடைந்தவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செந்தில், வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.