புழல் சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு
சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பல்லாவரம் கண்ணபிரான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.ஜீவானந்தன் (44). இவா், பல்லாவரம் காவல் நிலையத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பதியப்பட்ட ஒரு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றாா். இந்த தண்டனையை ஜீவானந்தன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் புழல் சிறையில் அனுபவித்து வந்தாா்.
இந்நிலையில் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவா் அதற்காக சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இதையடுத்து மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 26-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஜீவானந்தன் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜீவானந்தன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.