FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

திருச்சியில் உடல் நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய சிறை ஆயுள் தண்டனைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:37 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருச்சியில் உடல் நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய சிறை ஆயுள் தண்டனைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், முசிறி திருத்தியமலை பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் கா. உத்தண்டன் (72). இவா் மீது முசிறி காவல் நிலையத்தில் பதியப்பட்ட கொலை வழக்கில் இவருக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த 2025 செப். 27 முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்த இவருக்கு நீரிழிவு மற்றும் இருதய பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தண்டனுக்கு கடந்த மே 28-ஆம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, சிறைக் காவலா்கள் இவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், உத்தண்டன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அதிகாரி ராஜேஷ்கண்ணா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments