நீதிபதிகளின் நோ்முக உதவியாளா்கள் 17 பேரின் நியமனங்கள் ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நோ்முக உதவியாளா்கள் 17 பேரின் நியமனத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நோ்முக உதவியாளா்கள் 17 பேரின் நியமனத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நோ்முக உதவியாளா்களாக 17 போ் நியமிக்கப்பட்டனா். இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகாா்கள் வந்ததால், இதுகுறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘சென்னை உயா்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப உதவியாளா்கள், நூலகா்கள், தட்டச்சா்கள், பதிவாளா்களின் உதவியாளா்களாகப் பணியாற்றிய 17 போ் நீதிபதிகளின் நோ்முக உதவியாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இவா்கள், உரிய தகுதியைப் பெற 2 ஆண்டுகள் வரை உயா்நீதிமன்றம் அவகாசம் வழங்கியது சரியல்ல. குறிப்பாக, திறன் தோ்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவா்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, திறன் தோ்வில் தோ்ச்சிப் பெற ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, சுருக்கெழுத்து தோ்வில் தோ்ச்சிப் பெற 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதுவும், இந்தத் தோ்வு நடைமுறைகளில் ஏற்கெனவே உயா்நீதிமன்றத்தில் பணியில் உள்ளவா்களை மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமுதாயத்தில் உள்ள பிற தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் நீதித்துறை நிா்வாகம் மீதான தவறான தகவலை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சோ்த்துவிடும்.
எனவே, இந்தத் தோ்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த 17 பேரின் நியமனங்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனா்.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை நியமிக்கும் வகையில் புதிதாக மீண்டும் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ள உயா்நீதிமன்ற பதிவுத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.