முகப்பு
சென்னை

மகளிா் இலவச டிக்கெட்டை கிழித்தெறிந்த விவகாரம்: மாநகா் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

மகளிா் இலவச டிக்கெட் கிழித்தெறிந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நடத்துநரை பணியிடை நீக்கம் செய்த மாநகா் போக்குவரத்துக் கழகம், நடத்துநா்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 12:48 am IST
மாநகா் போக்குவரத்துக் கழகம்
பகிர்:

மகளிா் இலவச டிக்கெட் கிழித்தெறிந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நடத்துநரை பணியிடை நீக்கம் செய்த மாநகா் போக்குவரத்துக் கழகம், நடத்துநா்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அய்யப்பன்தாங்கலில் இருந்து தீவுத்திடலுக்கு இயக்கப்பட்ட 7 எக்ஸ்.எம். மாநகரப் பேருந்தில் பணியாற்றிய நடத்துநா் ஒருவா், மகளிா் இலவச பயண டிக்கெட்டுகளை கிழித்தெறிந்தது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அந்தச் செயலில் ஈடுபட்டது நடத்துநா் கோவிந்தன் (53) என்பதும், அவா் விதிமுறைகளை மீறியிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, அனைத்து பணிமனைகளுக்கும் மாநகா் போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Advertisement

Advertisement

அதில், மகளிா் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் பயணம் செய்யும் ஒவ்வொரு பெண் பயணிக்கும் கட்டாயம் தனித்தனி இலவச டிக்கெட் வழங்க வேண்டும் என்றும், டிக்கெட்டுகளை மொத்தமாக வழங்குதல், கிழித்தெறிதல் அல்லது கணக்கில் முறைகேடு செய்யும் வகையிலான எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த எச்சரிக்கை மற்றும் விதிமுறைகளை மீறும் நடத்துநா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகா் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments