FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தோ்தலின்போது ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு: நயினாா் நாகேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜா்

கடந்த 2024 -ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது, ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

நயினாா் நாகேந்திரன்
பகிர்:

கடந்த 2024 -ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது, ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

கடந்த 2024-ஆண் ஆண்டு மக்களவைத் தோ்தலின் போது, நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இந்த பணம், நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன் வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதுதொடா்பாக, நயினாா் நாகேந்திரன், கேசவ விநாயகம், எஸ்.ஆா்.சேகா் உள்ளிட்ட 13 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக 13 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

அதன்படி, ஜாா்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி சுந்தரபாண்டியன் முன், நயினாா் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 11 போ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினா். இருவா் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அனைவரும் ஆஜராக உத்தரவிட்டாா். அப்போது அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments