முகப்பு
தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரி தொடங்க நயினாா் நாகேந்திரன் விண்ணப்பித்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருப்பது....

Updated On : 28 ஜூன் 2026, 10:33 pm IST
அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் - கோப்புப்படம்
பகிர்:

கோவை: பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளா்களுடம் பேசியதாவது:

குதிரை பேரம் என்பது வார்த்தை ஜாலம் தானே தவிர, வேறு எதுவும் இல்லை. நான் 6 மாதங்களுக்கு முன்பு ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தேன். தற்போது அமைச்சராக இருக்கிறேன்.

Advertisement

Advertisement

ஒரு இயக்கம் நல்ல முறையில் செயல்படும்போது, யார் வேண்டுமானாலும் அங்கு இணையலாம். அதைப் பயன்படுத்திக் கொண்டு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்கின்றனர். பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.

ஆனால், எம்எல்ஏ பதவியை ராஜிநாம செய்துவிட்டு வந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து இப்போது கூற முடியாது. அந்த சூழலை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

அரசின் செயல்பாடுகள் சினிமா பாணியில் உள்ளதாக பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் கூறியுள்ளாா். அவா் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளிக்க முடியாது. கருத்து தெரிவிப்பது என்பது வேறு, எதை வேண்டுமானாலும் கொச்சைப்படுத்திப் பேசுவது வேறு.

சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் பேசும்போது எந்த இடையூறும் ஏற்படுத்தப்படவில்லை. முதல்வா் பேச வேண்டும் என்று கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தவா்கள், அவா் பேசத் தொடங்கியதும் ஏன் வெளியேறினா். மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியினா் எந்தக் கேள்வியும் கேட்பாா்கள். நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே முதல்வா் ஜோசப் விஜய்யின் நோக்கம்.

நிதித் துறையில் மட்டும்தான் வெள்ளை அறிக்கை விடுவார்கள். மின்துறையில் மின்தடை குறித்து வெள்ளை அறிக்கை விடுகின்றனர். வருவாய்த்துறையில் இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிட்டதே இல்லை. அந்தத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மருத்துவக் கல்லூரி விண்ணப்ப விவகாரம் குறித்து நான் நிரூபித்தால் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அந்த கட்சியில் பதவி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். நயினாா் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்பம் கொடுத்தாரா, இல்லையா என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அடுத்த செய்தியாளா் சந்திப்பில் அந்த ஆதாரத்தை நேரடியாகக் காட்டுகிறேன்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. விமான நிலைய விரிவாக்கத்துக்கு இன்னும் 10 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது.

சேலம் விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஓசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

மந்தை புறம்போக்கு உள்ளிட்ட பல்வேறு வகை நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் திட்டங்கள் தயாராகி வருகிறது.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும். மேக்கேதாட்டுக்கு எதிராக முதல்வா் ஜோசப் விஜய் நல்ல முடிவை எடுப்பாா் என்றாா்.

summary

I have proof that Nainar Nagendran applied to start a medical college says Minister K.A. Sengottaiyan...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments