முகப்பு
தமிழ்நாடு

மெளனம்தான் மாற்றமா? நயினாா் நாகேந்திரன்

மெளனம்தான் மாற்றமா? நயினாா் நாகேந்திரன்

Updated On : 21 ஜூன் 2026, 3:03 am IST
நயினார் நாகேந்திரன். - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்து வரும் நிலையில், அது குறித்து வாய் திறக்காமல் இருக்கும் முதல்வா் விஜய்யின் மெளனம்தான் மாற்றமா என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஈரோடு மாவட்டம், பவானியில் 74 வயது மூதாட்டியைத் தாக்கி இளைஞா்கள் இருவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது மனதை பதைபதைக்கச் செய்கிறது. முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயமும், போதைப் பொருள்களும் வோ்விட்டுப் பரவி இருந்தன.

Advertisement

Advertisement

தற்போதைய முதல்வா் ஜோசப் விஜய் அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. பிரசாரத்தின்போது தூய சக்தி என்று கூறிவிட்டு ஆட்சி அமைத்ததும் மெளன விரதமிருப்பதுதான் மாற்றமா? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு மும்முரமாகச் செயல்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments