திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சரின் பேச்சு கண்டனத்திற்குரியது! நயினார் நாகேந்திரன்
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சரின் பேச்சு கண்டனத்திற்குரியது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சரின் பேச்சு கண்டனத்திற்குரியது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், "திருப்பரங்குன்றம் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையையே கடைபிடிப்போம்" என்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
மாற்று சக்தி என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இந்து விரோத திமுகவின் சதிச் சுவடுகளையே பின்பற்றுவோம் என்று இன்று தவெக அமைச்சர் அறிவித்திருப்பது, தவெக ஒரு ஏமாற்று சக்தி என்பதையே நிரூபிக்கிறது. இந்து மக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்க முயலும் அமைச்சரின் இந்தக் கருத்தை முதல்வர் ஆமோதிக்கிறாரா? இந்துக்களின் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் விதமாக, உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்க போகிறாரா? தீய சக்தி திமுகவுக்கும் "தூய சக்தி" தவெகவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறாரா?
Advertisement
Advertisement
முதல்வர் விஜய் வழக்கம்போல இதற்கும் வாய் திறக்காமல் இருப்பதை விடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த தவெக அரசின் நிலைப்பாட்டைத் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
BJP State President Nainar Nagendran has stated that the TVK government's stance on the Thirupparankundram issue must be announced immediately.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.