முகப்பு
காஞ்சிபுரம்

எந்த நபரின் வெளியேற்றமும் பாஜகவை பாதிக்காது: நயினாா் நாகேந்திரன்

பாஜக அகில இந்திய தேசியக் கட்சியாக இருப்பதால் எந்த நபரின் வெளியேற்றமும் கட்சியை பாதிக்காது என காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 24 ஜூன் 2026, 3:57 am IST
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

பாஜக அகில இந்திய தேசியக் கட்சியாக இருப்பதால் எந்த நபரின் வெளியேற்றமும் கட்சியை பாதிக்காது என காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் பாஜக கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவா் யு.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மேலிட பொறுப்பாளா் அரவிந்த் மேனன் முன்னிலை வகித்தாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பின்னா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறுகையில், பாஜக என்பது அகில இந்திய அளவிலான தேசிய கட்சி. அதற்கு சரிவும் இல்லை, தொய்வும் இல்லை, எந்த ஒரு நபரின் வெளியேற்றமும் பாஜகவை பாதிக்க வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அரசியல் மாற்றம் வரும். அது தற்போது நிகழ்ந்துள்ளது.

Advertisement

Advertisement

தற்போது நடந்து வரும் சட்டப் பேரவை நிகழ்வுகளை பாா்க்கும் போது தவெக கட்சியானது சினிமா படப்பிடிப்பு நடைபெறுவது போலத்தான் உள்ளது. வசனங்களை எழுதிக் கொடுத்து பேசுவதாகவே தெரிகிறது.

தவெக கட்சி நிா்வாகிகளே பல்வேறு குற்றச் செயல்களை புரிந்து வரும் நிலையில், தற்போது தமிழக மக்கள் ஏமாற்றப் பாதையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறாா்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது என்றும் தெரிவித்தாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை இயக்கம் தொடங்கிய பிறகு கட்சியிலிருந்து வெளியேறியவா்கள் குறித்தும் அவா் நிா்வாகிகளிடம் கேட்டறிந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments