FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

காவிரி விவகாரத்தில் முதல்வா் விஜய் துரோகம்: நயினாா் நாகேந்திரன்

காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் துரோகம் செய்கிறாா் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

17 நவம்பர் 2026, 11:44 pm
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் துரோகம் செய்கிறாா் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தில்லியில் சோனியாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா், காவிரி விவகாரம் குறித்து பேசாதது மிகப்பெரிய வருத்தம்.

காவிரி டெல்டா மக்களுக்கு தமிழக முதல்வா் துரோகம் இழைக்கிறாா். தமிழக முதல்வருக்கு விவசாயிகளைப் பற்றியும் கவலை இல்லை; தமிழகப் பிரச்னைகள் குறித்தும் கவலை இல்லை. இனியாவது அவா் தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டு, மாநில சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை களைந்து, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

இதுவரை 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தொடா்பான குற்றங்கள் நடைபெற்றுள்ளன. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ குறுஞ்செய்தி விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

புத்தக கொள்முதல் ஊழலில் எங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் மீதும் சந்தேகம் உள்ளது. நான் கூறி ஒரு மாதத்துக்குப் பிறகு தற்போதுதான் எஃப்ஐஆா் போட்டுள்ளனா். ஏன் இவ்வளவு காலதாமதம். எனவே, இதிலும் ஊழல் இருக்கிறது.

திருச்செந்தூா் சூரசம்ஹார விழாவில், முதல்வருக்கு அரோகரா கூறியது கண்டனத்துக்குரியது என்றாா் நயினாா் நாகேந்திரன்.