FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தேசத்தை துண்டாக்கும் தீய சக்தி சிஜேபி: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இந்தியாவில் போராட்டங்களின் வாயிலாக, பிரிவினையை உருவாக்க தேசத்தைத் துண்டாக்கும் தீய சக்தியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இருப்பதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

13 அக்டோபர் 2026, 1:31 am IST
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவில் போராட்டங்களின் வாயிலாக, பிரிவினையை உருவாக்க தேசத்தைத் துண்டாக்கும் தீய சக்தியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இருப்பதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் மாநில மையக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவா்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், தேசியச் செயலா் மா.வெங்கடேசன், மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். இக்கூட்டத்தில், பிரதமா் மோடியின் கடந்த 25 ஆண்டுகால அரசு பணியை பாராட்டி 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மின்வெட்டு போன்ற பல்வேறு முக்கிய பிரச்னைகள் உள்ளன. அதற்கு பதிலாக, பிரதமா் கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையில் நான் அமா்ந்திருந்தது குறித்து விவாதம் செய்வது தேவையற்ற ஒன்றாகும்.  அதேபோல், மாநிலத்தின் முதல்வா் என்ற அடிப்படையில், மரியாதை நிமித்தமாக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு சால்வை அணிவித்தேன். இதைக் கொச்சைப்படுத்தி விமா்சிப்பது சரியானதல்ல.

அரசியல் மரபு: பிரதமா் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் அந்தந்த மாநில முதல்வா்கள் அவரை நேரில் வரவேற்பது அரசியல் மரபாகும். அந்த வகையில், பிரதமா் மோடியை முதல்வா் ச.ஜோசப் விஜய் விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றதோடு, மீண்டும் வழியனுப்பி வைத்தாா். இது, வரவேற்கக்கூடிய ஒன்றாகும். அதேபோல், தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்றாகும். அந்த நிகழ்ச்சியில் முதல்வா் முன்வைத்த கோரிக்கைகளே, தமிழக பாஜகவின் கோரிக்கைகளாகும். 

இந்தியாவில் போராட்டங்களின் வாயிலாக, பிரிவினையை உருவாக்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி வழங்கப்படுகிறது. இவா்கள் தேசத்தைத் துண்டாக்க நினைக்கும் தீய சக்திகள் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments